என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "போலீசார் வலைவீச்சு"
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை அடுத்த அஞ்செட்டி அருகே உரியன் கிராமத்தை சேர்ந்த 2 மாணவிகளிம் அதே ஊரை சேர்ந்த சிவா (18), வசந்த் (19) ஆகிய 2 பேரும் பாலியல் தொல்லை கொடுக்க முயற்சி செய்தனர்.
2 பேரும் அடிக்கடி வீட்டுக்கு வந்து பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதால் பாதிக்கப்பட்ட மாணவிகள் இது குறித்து அவரது தாயாரிடம் கூறினார்கள்.
மாணவிகளின் தாயார் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அந்த வாலிபர்கள் 2 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் இன்ஸ்பெக்டர் சாந்தா வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே தேரிக்குடியிருப்பு கீழ தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். இவருடைய மனைவி விஜயலட்சுமி (வயது 48). இவர்களுடைய மகள் பவித்ரா. இவருக்கு திருமணமாகி, மும்பையில் கணவருடன் வசித்து வருகிறார். விஜயலட்சுமி கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய கணவரிடம் இருந்து பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். பாஸ்கர் 2-வதாக மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் விஜயலட்சுமி தன்னுடைய தங்கை பப்பியின் திருமணத்துக்காக தனது 5 பவுன் தங்க நகையை கொடுத்தார். பின்னர் பல ஆண்டுகளாகியும் பப்பி நகையை திருப்பி தரவில்லை. இதுகுறித்து விஜயலட்சுமி தன்னுடைய தாயார் மணியம்மாளிடம் அடிக்கடி நகையை கேட்டு வந்தார்.
நேற்று முன்தினம் காலையில் விஜயலட்சுமி அங்குள்ள ரேஷன் கடையில் சென்று மண்எண்ணெய் வாங்கி கொண்டு தனது வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது வீட்டின் முன்பு அவருடைய தாயார் மணியம்மாள், தம்பி ஜெயச்சந்திரசேகர் ஆகிய 2 பேரும் இருந்தனர். அப்போது ஜெயச்சந்திரசேகர் தன்னுடைய அக்காள் விஜயலட்சுமியிடம், அடிக்கடி நகையை கேட்டு தாயாரை தொந்தரவு செய்யக் கூடாது என்று கண்டித்தார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது ஆத்திரம் அடைந்த ஜெயச்சந்திரசேகர், விஜயலட்சுமியிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பிடுங்கி, அங்குள்ள குப்பையில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்தார். பின்னர் அவர் தன்னுடைய அக்காள் விஜயலட்சுமியை தீயில் தள்ளி விட்டார்.
உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, விஜயலட்சுமியை காப்பாற்றினர். அவருக்கு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில், திருச்செந்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான ஜெயச்சந்திரசேகர், மணியம்மாள் ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
கடந்த 24-ந்தேதி அன்று பள்ளிக்கு சென்ற இம்மாணவி இரவு வெகு நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் பெற்றோர், மகளை பள்ளி, உறவினர்கள் வீடுகள் என பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால், மகளை கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது தான் மகள் மாயமாகி இருப்பது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தார்.
இந்த நிலையில் மாணவி வைத்துள்ள செல்போனை சைபர் கிரைம் போலீசார் கணினி மூலம் ஆய்வு செய்த போது, ஏற்காட்டில் இருப்பதாக சிக்னல் காட்டியது. இதையடுத்து போலீசார் ஏற்காட்டிற்கு சென்று மாணவியை பத்திரமாக மீட்டனர். அவரை ஏற்காடு, கொலக்கூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் விஜயகுமார் (21) என்பவர் கடத்திச் சென்றது தெரியவந்தது.
போலீசார் விசாரிக்கையில், மாணவி வைத்துள்ள செல்போனில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு தவறுதலாக விஜயகுமாரின் செல்போனுக்கு அழைப்பு போய் உள்ளது. தவறுதலாக அழைப்பு வந்து விட்டது என்று கூறிய பிறகும், விஜயகுமார் கேட்காமல் தொடர்ந்து செல்போனில் கால் செய்து பேசியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
பின்னர், ஆசை வார்த்தை காட்டி ஜேடர் பாளையத்துக்கு சென்று மாணவியை விஜயகுமார் கடத்திச் சென்றது தெரியவந்தது. விஜயகுமார் தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
தேனி:
உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பை 12-வது வார்டு மூப்பர் தெருவைச் சேர்ந்தவர் வனராஜ். இவரதுமகள் வெங்கடேஸ்வரி (வயது 21). இவர் சம்பவத்தன்று திடீரென மாயமானார். அவரை மதுரை மாவட்டம் பொய்கை கரைபட்டியைச் சேர்ந்த பாக்கியம் மகன் பூமி கடத்திச் சென்று விட்டதாக அவரது தந்தை வனராஜ் கோம்பை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கடத்தப்பட்ட இளம்பெண்ணையும், கடத்திச் சென்ற வாலிபரையும் தேடி வருகின்றனர்.
இதேபோல் பெரியகுளம் அருகே உள்ள இ.புதுக்கோட்டை நேரு நகரைச் சேர்ந்தவர் சகாய ஆரோக்கியம். இவர் அதே பகுதியில் பேன்ஸி ஸ்டோர் நடத்தி வருகிறார். இவரது கடையை அவரது மகள் தீபக் கிறிஸ்டி (22) அடிக்கடி கவனித்து வந்தார். சம்பவத்தன்று கடையில் இருந்து வீட்டுக்கு சென்ற தீபக் கிறிஸ்டி மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து அவரது தந்தைபெரியகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். தனது மகளை அவருடன் படித்த தேனியைச் சேர்ந்த தன்வீர் ரகுமான் என்பவர் கடத்தி சென்றிருக்க கூடும் என குறிப்பிட்டுள்ளார். அதன் பேரில் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்